சுப்பர் மார்க்கட்டுகளில் விறகுக்கட்டுகள் விற்பனைக்கு!

 

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு நெருக்கடியால் மண்ணெண்ணெய் மற்றும் விறகுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய்க்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது விறகுகளை பயன்படுத்த பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பல்பொருள்  அங்காடிகள் விறகு விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. ரூ.100 முதல் ரூ.400 வரையிலான விலைகளில் விறகுக் கட்டுகளை பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இணையதளத்தின் மூலமும் நாட்டில் தற்போது விறகு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 12/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை