ஜனவரியிலிருந்து ஆட்டோக்களுக்கு மீற்றர் அவசியம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இயங்கும் பெரும் பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்தப்படவில்லை எனவும் சாரதிகளினால் கட்டணம் அறவிடப்படுவதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜூன் 15ஆம் திகதி முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முச்சச்கர வண்டிகளில் அதிக கட்டணம் அறவிடப்படுவதாகவும் ஒவ்வொரு வண்டிகளிலும் வேறுபட்ட கட்டணங்கள் பெறப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் முச்சக்கர வண்டிகளை நிர்வகிக்க தனியான அதிகார சபை ஒன்றை அமைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது தெரிந்ததே.(பா)

 

Mon, 12/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை