அரசாங்க செலவில் அமைச்சர்கள் சிலர் வெளிநாட்டு பயணமா?

முற்றாக மறுக்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரண

 

சில அமைச்சர்கள் அரச செலவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை  இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண மறுத்தார். சிலர் தமது சொந்த செலவில் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் சில அமைச்சர்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் டொலர் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாடு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் பிரசுரமாகியுள்ளன. ஆனால் சாதகமான பகுதிகள் பற்றி பேசப்படுவதில்லை.

நானும் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் 02 வருடங்களாக எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை. ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தின் போது குறைந்தளவான அதிகாரிகளை மட்டுமே அழைத்துச் சென்றார். சிலர் தமது சொந்த செலவில் வெளிநாடு சென்றுள்ளனர். சிலர் உத்தியோகபூர்வமான விஜயம் செய்துள்ளனர். அவை தேவையான பயணங்களாகும். அவர்கள் கட்டுப்பாட்டுடனே செலவு செய்கின்றனர். அரசின் செலவுகளை குறைத்து வருகிறோம். ஜனாதிபதி வருடாந்தம் 03 பில்லியன் ரூபாவை சேமிக்கிறார்.நாமும் அமைச்சர்களாக செலவை குறைக்க பங்களிக்கிறோம். வீண் விரயங்களை மட்டுப்படுத்துவதோடு உச்ச அளவில் செயற்பட்டு வருகிறோம் என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை