11 பில்லியன் டொலர் வரி செலுத்தும் மஸ்க்

உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க், இந்த ஆண்டுக்காக 11 பில்லியன் டொலர் வரியை செலுத்தவிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மஸ்க் செலுத்தும் வரி பற்றி சமூக ஊடகத்தில் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஸ்க் வரி செலுத்த வேண்டும் என்று குடியரசு கட்சி செனட்டர் எலிசெபத் வொர்ரன் இந்த வார ஆரம்பத்தில் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

'ஆச்சரியப்படுபவர்களுக்காக, நான் இந்த ஆண்டு 11 பில்லியன் டொலர் வரி செலுத்துவேன்' என்று மஸ்க் பதிலளித்துள்ளார்.

மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மற்றும் விண்வெளி உற்பத்தி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரான மஸ்க், இந்த ஆண்டு ஆரம்பத்தில் உலகின் பெரும் செல்வந்தராக முதல் இடத்தை பிடித்தார்.

ப்ளும்பேர்க் செல்வந்தர்கள் சுட்டியின்படி மஸ்கின் சொத்து மதிப்பு 243 பில்லியன் டொலர்களாகும். இதில் டெஸ்லாவின் மதிப்பு 1 ட்ரில்லியன் டொலர் என்பதோடு ஸ்பேஸ்எக்ஸின் மதிப்பு 100 பில்லியன் டொலர்களாகும்.

 

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை