மில்லியன் கணக்கானோருக்கு சீனாவில் வைரஸ் சோதனை

சீனாவின் ஷி நகரில் 42 பேரிடம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த நகரின் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்களிடம் வைரஸ் சோதனை நடத்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று முதல் முறை கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் எல்லை கட்டுப்பாடுகள், முடக்கநிலைகள் மற்றும் நீண்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டு நடுப்பகுதி தொடக்கம் தொற்றுச் சம்பங்கள் குறைந்து காணப்படுகின்றன.

எனினும் அண்மைக் காலத்தில் அந்த நாட்டில் பல நகரங்களிலும் மீண்டும் தொற்றுச் சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன.

இதில் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷி நகரில் நேற்று 42 புதிய தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 9 ஆம் திகதி தொடக்கம் அந்த நகரில் பதிவான தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

நகரின் பாடசாலைகள் மற்றும் உள்ளக அரங்குகள் மூடப்பட்டு பொதுமக்கள் வெளியே செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை