படுகொலைகள்: தலிபான்களுக்கு அமெரிக்க கூட்டணி எச்சரிக்கை

ஆப்கான் பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர்களை இலக்கு வைத்து படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

22 நாடுகள் கூட்டாக வெளியிட்ட இந்த அறிவிப்பில் முன்னாள் அரச அல்லது பாதுகாப்பு படையினருக்கு தீங்கு செய்வதில்லை என்று தலிபான்கள் அளித்த உறுதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“கொலைகள் மற்றும் காணமலாக்கப்படுவது குறித்த அறிக்கைகள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்புக் குழு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் அங்கு 100க்கும் அதிகமான முன்னாள் அரச அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 15 மற்றும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் சரணடைந்த அல்லது பிடிக்கப்பட்ட ஆப்கான் பாதுகாப்பு படையின் 47 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை