பாடசாலை துப்பாக்கிச் சூடு; குற்றச்சாட்டை மறுத்த மாணவனின் பெற்றோர்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் பெற்றோர் மீது சுமத்தப்பட்டுள்ள நோக்கமில்லாக் கொலைக் குற்றத்தை இருவரும் மறுத்துள்ளனர்.

ஜேம்ஸ்–ஜெனிபர் கிரம்ப்லி எனும் அந்தத் தம்பதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைக்கு தோன்றவில்லை.

டிட்ரோயிட் நகரின் வர்த்தகக் கட்டடம் ஒன்றில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். தப்பிச் செல்ல அவர்கள் முயன்றார்களா என்பது இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை.

தங்கள் 15 வயது மகனான ஈத்தனுக்கு கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்ததாய்த் தெரியவந்துள்ளது.

கவலையளிக்கும் குறுஞ்செய்திகளையும் படங்களையும் ஈத்தன் பகிர்ந்ததாகப் பாடசாலை எச்சரித்ததையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆசிரியர் உட்பட மேலும் சிலரும் காயமுற்றனர்.

பெற்றோர் பாடசாலை அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்திய சில மணிநேரத்தில் மகன் அந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.

தாக்குதல் நடத்திய மாணவன் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை