இலங்கையரின் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னிப்பு கோரும் வாசகங்களுடன் பதாகைகள்

பாகிஸ்தானில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த நபரின்  கொலையைக் கண்டித்ததுடன், இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் கொடூரமாகத் தாக்கப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பல பாகிஸ்தானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்த சம்பவத்திற்கு அவர்கள் தங்கள் டுவிட்டர் கணக்குகளில் இலங்கையிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை