வேகமாகப் பரவும் ஒமிக்ரோன் திரிபு

கொரோனா வைரஸ் தொற்றின் ஒமிக்ரோன் திரிபு அதன் முந்தைய திரிபான டெல்டாவை விட வேகமாக பரவுவதாக தரவுகள் காட்டுகின்றன.

டெல்டா திரிபு 2020 டிசம்பரில் இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மே மாதம் ஆகும்போது 48 நாடுகளில் அவதானிக்கப்பட்டதோடு ஒக்டோபர் மாதமாகும்போது குறைந்தது 191 நாடுகளில் இந்த வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் அதிக எண்ணிக்கையான பிறழ்வுகளுடன் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் திரிபு ஆறு நாட்களுக்குள் 17 நாடுகளுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பொட்ஸ்வானா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹொங்கொங், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து (சாத்தியமான சம்பவம்) மற்றும் பிரிட்டன் உட்பட நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலக அளவில் இந்த வைரஸ் திரிபு வேகமாக பரவும் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் முதலாவது ஒமிக்ரோன் திரிபு கண்டுபிடிக்கப்பட்ட தென்னாபிரிக்காவின் குவாடெங் மாகாணத்தில் கடந்த நவம்பர் 21 மற்றும் 28 ஆம் திகதிக்கு இடையே தொற்றுச் சம்பவங்கள் 360 மடங்கு அதிகரித்துள்ளது.

Wed, 12/01/2021 - 08:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை