27 மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது

 

நாட்டில் தற்போது 27 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

உணவு பொருட்களின் விலைகள் அபரிமிதமாக அதிகரித்து வரும் அதே வேளையில்,  மருந்துகளின் விலைகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதால் மக்கள் உயிரை இழக்க நேரிடும். வைத்தியசாலைகளில் விஷ எதிர்ப்பு ( anti-venom) மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், பாம்புக் கடியால் சிகிச்சை பெற வருபவர்கள் துரதிஷ்டவசமாக வீடு திரும்புவதில்லையென்றும் குறிப்பிட்ட அவர், இருதய நோய்கள், நரம்பியல் பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாண்டு அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் மருத்துவமனைகள் ஊடாக இலவசமாக வழங்க ரூ.125.95 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அடுத்த வருடத்திற்கான மருந்துகளை வைத்தியசாலைகள் ஊடாக வழங்குவதற்கு 65.375 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய அரசாங்கம் பொது மக்களின் நலனில் கவனம் செலுத்தவில்லை என்பது இதனூடாக தெளிவாகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 -ராஜித

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை