மலேசிய வெள்ள அனர்த்தம்; உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு

மலேசியாவில் இதுவரை காணாத வெள்ளப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

பலரை இன்னமும் காணாத நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் பலர் இன்னமும் இருப்பிடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வெள்ளப் பேரிடர் குறித்துப் பொது விசாரணை நடத்தும்படி கூறியுள்ளார்.

மக்களுக்கு உதவிகளை அனுப்புவதில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததும் மீட்புப் பணியாளர்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதும் இயற்கைப் பேரிடரை நிர்வாகப் பேரிடராக மாற்றியுள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் கொவிட்-19 நோய்ப்பரவலைத் தவிர்த்து, வெள்ளம் தொடர்பான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் குறித்து மலேசிய சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு எந்தத் தொற்றுநோயும் பரவுவதாகத் தகவல் இல்லை என்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் அது கூறியது.

Fri, 12/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை