'ஒமிக்ரோன்' வைரஸ் 106 நாடுகளுக்கு பரவல்

உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் திகதி முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருவதுடன் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரோன் திரிபுதான் காரணமென்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அத்தோடு, தென்னாபிரிக்காவில் இந்த ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு உச்சம் அடைந்து, தற்போது குறையத்தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வியாழக்கிழமை ஒரு நாளில் 27,000 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது 15,424 ஆக குறைந்துள்ளது.

 

 

Fri, 12/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை