அழைப்புவிடுத்தால் இ.தொ.கா நிச்சயம் பங்கேற்க தயார்

CWC பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்கலாமென இ.தொ.கா பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,

"தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?" என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறகையில்,

" இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கிறோம். மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் எமக்கு தொடர்பு இருந்தது. எமக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும்கூட எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி " - என்றார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Fri, 12/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை