30 மில். பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகையொன்றை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத் சில்வா தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து 1.5 கிலோ ஐஸ் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.சந்தேக நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை