சீன நட்சத்திர பெண்ணுக்கு 210 மில். டொலர் அபராதம்

சீனாவின் சமூக ஊடக நட்சித்திரமான ஹுவாங் வெய் என்ற பெண்ணுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்காக 1.34 பில்லியன் யுவான் (210 மில்லியன் டொலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பல மில்லியன் பின்தொடருனரைக் கொண்ட வெய், தமது தளத்தை பயன்படுத்தி பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தனது வருவாமானத்தை மறைத்ததாகவும் மேலும் பல நிதி குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஹங்சு நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. வியா தமது செயலுக்குச் சீன சமூக ஊடகத் தளமான வெய்போ பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவில் ஒன்லைன் மூலமான பொருட்கள் கொள்வனவு செய்வது வளர்ச்சி அடைந்த நிலையில் 36 வயதான வெய் அந்நாட்டின் பிரதான இணை பிரபலமாக மாறியுள்ளார்.

பொழுதுபோக்குத் துறையில் வரி ஏய்ப்பு, தவறான நடத்தை ஆகியவற்றில் ஈடுபடுவோரைக் குறிவைத்து சீனா இந்த ஆண்டு ஆரம்பம் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் பல சமூக ஊடகப் பிரபலங்கள் சிக்கினர்.

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை