கைதான திபெத்திய துறவி ஓர் ஆண்டுக்கு மேல் மாயம்

மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கைது செய்யப்பட்ட திபெத்திய துறவி டென்சின் டார்கி தொடர்புகொள்ள முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஓர் ஆண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இந்தத் துறவி தொடர்பில் பொலிஸாரால் எந்த தகவலும் அளிக்கப்படாத நிலையில் அவர் எங்கே உள்ளார் அல்லது அவரது வழக்கு விசாரணைக்கான திகதி பற்றி குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

30 வயதுகளில் இருக்கும் டார்கி, நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் தலாய் லாமாவின் புகைப்படங்களை வைத்திருந்தது மற்றும் அரசியல் ரீதியில் உணர்வுபூர்வமான விடயங்களை தமது கைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக 'ரேடியோ பிரீ' வானொலி குறிப்பிட்டுள்ளது.

டார்கியுடன் மேலும் பல துறவிகள் கைது செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது இன்னும் வழக்கு விசாரணை நடந்ததா அல்லது இல்லையா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை