10,000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

அமைச்சர் தினேஷ் வழங்கி வைத்தார்

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் சுமார் 10,000 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் அவிசாவளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை பாடசாலைகளில் குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பிரண்டிக்ஸ் நிறுவனம் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள மற்றும் விசேட தேவையுடைய மாணவ, மாணவிகளுக்கும் விசேட புலமைப் பரிசில்களையும் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், சீத்தாவக்க நகரசபை உறுப்பினர் யூ.ஏ.எச். உபேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Fri, 12/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை