சீனா மற்றும் பூட்டன் இடையே தொடரும் எல்லைப் பிரச்சினை

எந்த ஓர் எல்லை நாட்டுடனும் சீனா நல்லுறவை பேணாத நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பூட்டானுக்குள் புகுந்த சீன மக்கள் 4 கிராமக் குடியேற்றங்களை உருவாக்கினர்.

இந்த எல்லை மீறல்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றபோதும், அண்மைய ஆண்டுகளிலேயே சர்வதேச அவதானத்தை பெற்றுள்ளது.

ஆசியாவின் இரு வல்லரசுகளுக்கு மத்தியில் இருப்பது பூட்டானுக்கு பூகோள ரீதியில் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. இந்திய – சீன எல்லையில் பதற்றம் உச்சத்தில் இருப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையே சமநிலையான உறவை பேணுவதில் பூட்டான் சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளது.

எனினும் பூட்டானை ஒரு பிரச்சினையற்ற அண்டை நாடாக பார்க்கும் இந்தியா இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. ஆனால் பூட்டானின் ஆட்புலத்தை குறைத்து மதிப்பிடும் சீனா, அது இந்தியாவுக்கு சவால்விடுவதற்கு சமமாக பூட்டானையும் எதிர்கொன்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை