பாக். இஸ்லாமியவாத அமைப்பு ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செய்க் ரஷீத் அஹமதுவின் பகிரங்க எச்சிரிக்கையையும் மீறி தஹ்ரிக்கி லப்பைக் பாகிஸ்தான் அமைப்பினர் குஜராத் தொடக்கம் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பேரணி நடத்துகின்றனர்.

தடை செய்யப்பட்ட இந்த இஸ்லாமியவாத அமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வியை சிறையில் இருந்து விடுதலை செய்யாவிட்டால் தலை நகரை முடக்குவதாக இந்த அமைப்பு அரசை எச்சரித்துள்ளது.

இந்த பேரணி இடம்பெறும் பாதையின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் பேரணி சனிக்கிழயாகும்போது வசீராபத்தை அடைந்தது. அடுத்த உதரவு வரும் வரை அவர்கள் வசீராபத்தில் தங்கியுள்ளனர். இதனால் அந்த நகரில் இணையதள சேவை முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனை ஒட்டி தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.

Mon, 11/01/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை