இஸ்லாமிய திருமண இறுதி சட்ட வரைபு

இரு வாரங்களில் அமைச்சரவைக்கு

இஸ்லாமிய விவாக - விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை இரத்துச் செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து புதிய சட்ட வரைபு தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

திருமண வயதெல்லையை 18 ஆக மாற்றுதல், திருமணத்தைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குதல் மற்றும் அதற்குப் பெண்களின் கையொப்பத்தினையும் பெற்றுக் கொள்ளுதல், காதி முறைமையை இல்லாது செய்தல், சிறுவயது திருமணத்தைத் தடுத்தல், காதிகளாகப் பெண்களையும் நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் உள்ளிட்ட யோசனைகள் அதில் அடங்குகின்றன.

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை