சீனாவில் 6 வாரங்களில் இல்லாத வைரஸ் தொற்று

சீனாவில் 6 வாரங்களில் இல்லாத அளவில் சுமார் 60 பேருக்குக் கொரொனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வடக்கே உள்ள ஹெய்லோங்ஜியாங், இன்னர் மங்கோலியா, கான்சு ஆகிய பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் வைரஸ் பரவல் நிலவரம் மோசமடைந்து வருவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் நான்காவது முறையாக வைரஸ் பரவல் தலைதூக்கியுள்ளது.

இம்மாதம் 17ஆம் திகதிக்கும் 29ஆம் திகதிக்கும் இடையில் உள்நாட்டில் 377 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீன நகரங்கள் பல முடக்கப்பட்டுள்ளன.

பல நகரங்களில் ஒட்டுமொத்த மக்களிடமும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“கடந்த 14 நாட்களுக்குள் 14 மாகாணங்களில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் அல்லது நோய் அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளது” என்று தேசிய சுகாதார ஆணைய பேச்சாளர் மி பங் தெரிவித்துள்ளார்.

Mon, 11/01/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை