சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை

பொலிஸ் ஊடக பிரிவு எச்சரித்து அறிக்கை

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட 421 பேருந்துகள் மற்றும் 60 சொகுசு பேருந்துகளின் சாரதிகளுக்கு பொலிஸ் எச்சரிக்கை விடுத்ததாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில்  பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் நேற்றுமுன்தினம்(07) கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்பட்ட 495 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஒப்பீட்டளவில் கொவிட் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் கொவிட் பரவல் முற்றாக நீங்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்துத் தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை