உலகம் அங்கீகரிக்க தலிபான் அழுத்தம்

சர்வதேச சமூகம் தலிபான்களை ஏற்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆப்கானில் இருந்து அச்சுறுத்தல்களை சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தலிபான் பேச்சாளர் சுபைஹுல்லா முஜாஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலிபான்கள் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

‘கடந்த காலத்தில் எம்மை அங்கீகரிக்காததன் காரணமாக அமெரிக்காவுடன் நாம் சண்டையிட்டோம். தலிபான்களை அங்கீகரிக்காவிட்டால் ஆப்கானில், பிராந்தியத்தில் மற்றும் சர்வதேசத்தில் பிரச்சினைகளே அதிகரிக்கும்’ என்று முஜாஹித் குறிப்பிட்டார்.

தலிபான்கள் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Tue, 11/02/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை