இலங்கை ஏழு பேர் கொண்ட ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் பென் கொலின்ஸ்

ரக்பி அணியின் புதிய அனுசரணையாளராக மூஸ் ஆடை நிறுவனம் கைகோர்ப்பு

எதிர்வரும் ஆசிய செவன்ஸ் ரக்பி சம்பியன்ஷிப்பை இலக்காக கொண்டு இலங்கை அணியை பலப்படுத்த ரக்பி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய செவன்ஸ் ரக்பி உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி ஆசியாவில் தீர்க்கமான நிகழ்வாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் இலங்கை செவன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த இங்கிலாந்தின் பென் கொலின்ஸின் சேவையை ரக்பி சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

2012 இல் இலங்கை செவன்ஸ் ரக்பி அணியின் பயிற்சியாளராக இருந்த கொலின்ஸ், முன்னாள் சர்வதேச செவன்ஸ் ரக்பி வீரர் ஆவார். அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இங்கிலாந்து செவன்ஸ் ரக்பி அணிக்காக விளையாடியுள்ளார். உலக செவன்ஸ் ரக்பியில் அதிக கோல் அடித்தவர் என்ற அவரது சாதனை இன்றுவரை உடைக்கப்படாமல் உள்ளது. இலங்கை செவன்ஸ் ரக்பி பயிற்சியின் பணிப்பாளராக பென் கொலின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார். இவரது மேற்பார்வையின் கீழ், ஆசிய செவன்ஸ் தொடருக்கான இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக தேசிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான நில்பர் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை ரக்பி சங்க தலைவர் ரிஸ்லி இல்யாஸ் தெரிவித்தார். 2013 இல் பென் கோலின்ஸின் தேசிய ஏழு ரக்பி பயிற்சியாளராக பதவியேற்ற நில்பர், இலங்கையை ஆசியாவில் மூன்றாவது இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அவர் நாட்டில் உள்ள பாடசாலை ரக்பியில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

ஆசிய ரக்பி மைதானத்திற்கான இலங்கை ரக்பி அணியின் புதிய அனுசரணையாளராக மூஸ் ஆடை நிறுவனம் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டது. ரக்பி சங்கத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் குறுகிய சுற்றுப்பயணமாக இலங்கை வந்துள்ள ஆசிய ரக்பி யூனியனின் தலைவர் கைஸ் அப்துல்லா அல் டலானியும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்

Tue, 11/02/2021 - 10:44


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை