3 வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று ஆரம்பம்

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய இராணுவத்தினரால் 3வது டோஸ்  பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்ட நடவடிக்கைகள்  நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டன. 

முன்னணி சுகாதாரதுறை ஊழியர்கள் உட்பட முப்படைஇ பொலிஸார்இ சுகாதார மற்றும் சுற்றுலா துறை மற்றும் ​தெரிவு செய்யப்பட்ட ஏனைய முன்கள ஊழியர்களும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளனர். 

இத்திட்டம் நேற்றுக் காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா   தலைமையில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இதன்போது ஊடகவியராளர்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனரல் சவேந்திர சில்வா மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சுற்றுலாஇ விமான நிலையம் மற்றும் ஏனைய துறைகளில் தொற்று நோய் தடுப்பு பணிக்காக முன்னணியிலிருந்து பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

அதேபோல் 'ஆறு மாதங்களுக்குப் முன்பாக தடுப்பூசிகள் இரண்டினையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மேற்படி பூஸ்டர் தடுப்பூசி வழங்க முடியும் என்றும்இ தற்போதும் நாளாந்தம் 500 – 600 வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படும் அதேவேளை சுமார் 14இ000 வர தனிமைப்படுத்தலில் உள்ளமையால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.    பூஸ்டர் தடுப்பூசிகளாக பைஸர் தடுப்பூசியை தொற்று நோய் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னணி பணியாளர்கள்இ 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற ஒழுங்கில் வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 11/02/2021 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை