வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதிக்கு தடையில்லை

முஸம்மிலுக்கு ஷெஹான் சேமசிங்க பதில்

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

அத்தோடு வாகன உதிரிபாகங்களின் விலையில் வரம்பற்ற அதிகரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

Wed, 11/10/2021 - 07:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை