அமைச்சர் டக்ளஸுக்கு இன்று 63 ஆவது அகவை

இந்து மத பீட பாபு சர்மா ஆசி

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் 63 ஆவது பிறந்த தினத்திற்கு சர்வதேச இந்து மத பீடம் சார்பாக கலாநிதி. சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா ஆசிகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது அதிக பற்றுதல் கொண்டவரும், அவர்களை இலங்கையராக அறிமுகப்படுத்துவதில் அக்கறை காட்டுபவரும், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் தீர்க்கதரிசியாக செயற்படுபவருமான அமைச்சர் டக்ளஸின் தமிழ் மக்களுக்கான பணிகள் மென்மேலும் வளர இறையருள் கிடைக்கட்டுமென இந்து மத பீடம் சார்பாக பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

Wed, 11/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை