பயங்கரவாத செயல்களுக்கு ஒருபோதும் இடமளியோம்

கிண்ணியா மக்கள் சந்திப்பில் ரிஷாத் எம்.பி

பயங்கரவாத செயல்களுக்கு எப்போதும் நாங்கள் துணை போகின்றவர்கள் இல்லை.நாட்டுப்பற்று மிக்கவர்களாகவே வாழ்கிறோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கிண்ணியாவில் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்மை பயமுறுத்தும் மோசமான காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் வரப்போகும் ஆபத்துக்களை எதிர்கொண்டு அச்சமில்லாத சமூகமாக எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

இந்த நாட்டில் எமக்கெதிரான சதிகளை முறியடித்து, நிம்மதியான ஆட்சி மலர்ந்து, பல்லின ஒற்றுமை மலர நாம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என ரிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை