அதிகார போட்டியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்

சீனாவில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டு ஆளும் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி ஷி ஜின்பின் மற்றும் பலம்மிக்க தரப்புகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதில் முன்னாள் துணை ஜனாதிபதி செய் கிங்கொங் மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி வங் குவிசாங் உட்பட ஜனாதிபதிக்கு எதிராக பலம்மிக்க தரப்புகள் இருப்பதாக ஹொங்கொங் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த மோதல் பற்றி சீனாவின் அரச ஊடகங்களான நெட் ஈஸ்ட் மற்றும் சோஹு இணையதளங்களிலும் செய்தி வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பொலிஸார், உளவு பொலிஸார் மற்றும் நீதிமன்றங்கள் உட்பட அரசியல் சட்ட அமைப்பின் பல மூத்த அதிகாரிகளிடையேயும் மோதல் எற்பட்டிருப்பதோடு கட்சியின் உச்ச தலைவர் ஒருவருக்கு எதிராக துரோகம் மற்றும் வஞ்சகத்தில் ஈடுபடுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இது பற்றிய செய்தி இணையதளங்களில் இருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Mon, 11/08/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை