பாதிக்கப்பட்ட சகல விவசாயிகளுக்கும் நஷ்டஈடு

 

சீரற்ற காலநிலையினால் பயிர்கள் சேதமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும்  விவசாயக் காப்புறுதிச் சபை ஊடாக நட்டஈடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த வாரம் 11 ஆயிரம் ஹெக்டயார் பயிர்ச் செய்கைகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் யாழ் மாவட்டத்திற்கே அதிக சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 03 மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நெல் மாத்திரமன்றி மரக்கறி உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன.ஒவ்வொரு மாதமும் 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் மழையினால் மரக்கறி பயிர்செய்கை சேதமடைந்துள்ளதாகவும், இதனால் மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை