விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார்

ஐஸ், கேரள கஞ்சாவுடன் 12 பேர் கைது

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார் போதைப்பொருளுடன் 12 நபர்களை கைதுசெய்துள்ளனர்.

இந்த விருந்துபசார நிகழ்வு ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் இருந்து கொக்கெய்ன், ஐஸ், கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.கைதான சந்தேக நபர்கள் அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமகாராமை மற்றும் கோனபீனுவலை பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tue, 11/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை