மூத்த பத்திரிகையாளர் கானமயில்நாதன் நேற்று காலமானார்

மூத்த ஊடகவியலாளரும், உதயன் பத்திரிகை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் நேற்று (22) தனது 79 ஆவது வயதில் காலமானார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் திகதி பிறந்தார். உதயன் பத்திரிகை 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர்.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியான சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியமைக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி யாழ். ஊடக அமையத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 11/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை