ஆட்சி மாறினாலும் அரசின் கொள்கை மாறாது முன்னெடுப்பது அவசியம்

இந்தியா போன்றதொரு திட்டம் எமக்கு அவசியம்

இந்தியாவில் நீண்ட காலங்களுக்கு கொள்கை தயாரிக்கப்பட்டு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. எமது நாட்டிலும் அவ்வாறு சகல தரப்பினரும் இணைந்து தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு முன்னெடுத்தாலே நாட்டை முன்னேற்ற முடியும் என அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

ஒருவரை பற்றி நம்பும் போது அவர் என்ன செய்தார் என்ற கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். 2001 முதல் சஜித் பிரேமதாஸ எம்.பியாக இருக்கிறார். மத்தள விமானநிலையம் மற்றும் துறைமுகம் என்பன அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆட்சியில் நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்டு மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தியதால் பாரிய சேதம் ஏற்பட்டது. இந்த நிலையிலே மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

திஸ்ஸமாகாராம பிரதேச சபையை ஜே.வி.பி வென்றது. ஆனால் தலைவர் மோசடி செய்ததால் மக்கள் மீண்டும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கவில்லை.

இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது. நாம் பால் கிராமம் அமைத்து பால்உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சி மாறும் போது திட்டங்கள் மாறுகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பால்மா இறக்குமதி செய்யப்படுகிறது.

குறைகள், குற்றச்செயல்களுக்கு தான் ஊடகங்களில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆட்சி மாறும் போதும் திட்டங்கள் மாறுகின்றன. நாட்டை கட்டியெழுப்ப ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

வெளிநாட்டு ஆடைகள், தொழில்நுட்ப பொருட்கள் என்பவற்றின் மீது ஆசைப்படுகிறோம். உள்நாட்டு பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை.

சேதனப் பசளை தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்று கூறவில்லை. ஊர்களிலே சேதனப் பசளை தயாரிக்கலாம். சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியிலும் இதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்றன. வைக்கோளை எரிப்பது ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டது.

விமர்சிக்கும் எவரும் மாற்று யோசனை முன்வைப்பதில்லை. சகலரதும் யோசனைகளை பொற்று சிறந்த கொள்கை தாயரிக்க வேண்டும்.

இந்தியாவில் அப்துல்கலாமின் காலத்தில் கொள்கை தயாரிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. ஆட்சி மாறிய போதும் 2020 வரை அந்த கொள்கை செயற்படுத்தப்பட்டது.

மீண்டும் 30 வருடங்களுக்கு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏன் எம்மால் அவ்வாறு செய்ய முடியாது.

நெருக்கடியான நிலைமையில் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம்.மக்களை தூண்டிவிடாது நாட்டை முன்னேற்ற ஒன்றிணைவோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Tue, 11/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை