எதிரணி நடத்தும் போராட்டங்களால் மக்களுக்கு பாதிப்புடன் அசௌகரியம்

பொறுப்பற்ற செயலென காமினி லொகுகே கண்டனம்

 

 கொவிட் தொற்று ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டு மட்டத்தில் இருக்கும் நிலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசித் திட்டத்தினால் நாட்டில் கொவிட் தொற்று நிலைமை ஒரு குறிப்பிட்ட மட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு அரச சாரா அமைப்புகளும் சில தொழிற்சங்கங்களும் இந்த திட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளன. நேற்று கல்வி அமைச்சின் அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது.

தேசிய கல்வி நிறுவனம் (NIE) கல்வி அமைச்சின் கீழ் உள்ளதாகவும், அது பல்கலைக்கழக மட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளோம்.

அரசாங்கம் தம்மை பல்கலைக்கழக மட்டத்திற்கு கொண்டு வரவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கள் அரசாங்கம் அவ்வாறான வாக்குறுதியை அளித்தது, நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். எனினும், கொவிட் நெருக்கடியால் இதைச் செய்ய முடியாது என போராட்டக்காரர்களுக்குத் தெரியும்.

அவர்களுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். அந்தந்த நபர்களுடன் கலந்துரையாடிய பின்னரே நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். தொழிற்சங்கங்களுக்கான எங்களின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், மக்கள் விடுதலை முன்னணியும் இந்த விடயத்தில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Thu, 11/11/2021 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை