ஆப்கானில் உணவு பிரச்சினை தீவிரம்

ஆப்கானிஸ்தானில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நிதி இல்லாத சூழலில் தலிபான்கள் ஆட்சியில் அந்நாடு நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போதிய நிதியின்மை காரணமாக உணவுப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதோடு சிலர் தமது பிள்ளைகளையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கான சர்வதேச மன்றம் தெரிவித்துள்ளது.

“95 வீதமான ஆப்கானியர்களுக்கு உண்பதற்கு போதுமான உணவு இல்லாததோடு நவம்பர் ஆரம்பத்தில் குளிர்காலம் வரவிருக்கும் நிலையில் மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் பட்டினி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானின் பாதிக்கும் அதிகமான மக்கள் தொகையான 28.8 மில்லியன் பேர் நவம்பரில் இருந்து உணவு பாதுகாப்பு இன்மைக்கு முகம்கொடுத்திருப்பதாக ஐ.நா உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

Thu, 11/11/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை