வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இராணுவத்தினரின் பங்களிப்பு

பூரண ஆதரவு வழங்குவதாக ஆளுநரிடம் தளபதி தெரிவிப்பு

வடமாகாண மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு வலு சேர்க்க தமது பூரண ஆதரவை இராணுவம் வழங்கும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்று முன்தினம் (04) வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடிய போது, வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என இராணுவ தளபதி உறுதி வழங்கினார்.

 

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை