கிளிநொச்சி நகரில் கோர விபத்து; இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி ஏ 09 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பரந்தன் பகுதியிலுள்ள கட்டட பொருட்கள் உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர் பாரவூர்தியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குமரபுரம், பரந்தன் பகுதியிலுள்ள  யூட்பவிஷன் (வயது 29) என்ற இளைஞனும் இல 61 கண்டி வீதி பரந்தனை சேர்ந்த ச.காந்தீபன் (வயது 34) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டன.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Wed, 11/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை