எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூடாது

தனது நிலைப்பாடு என்கிறார் கம்மன்பில

எரிபொருள் விலையை அதிகரிப்பதா, இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் பாரிய வேறுப்பாடு இருப்பதால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த மக்கள் முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இவ்வாறு மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Wed, 11/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை