இந்துவின் மைதான திறப்பு விழாவுக்கு நாமல் வாழ்த்து

விரைவில் நேரில் வருவதாக டுவிட்டரில் பதிவு

யாழ். இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டு மைதானத் திறப்பு விழாவுக்கு இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

யாழ் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 2022வரவுசெலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதன் காரணமாக திறப்பு விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை, எனினும் நான் விரைவில் மைதானத்திற்கு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

 

Mon, 11/15/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை