சூடான் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஐவர் பலி

சூடானில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு மருத்துவர்களின் மத்திய குழு குறிப்பிட்டுள்ளது.

இதில் நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிக் காயத்தால் கொல்லப்பட்டிருப்பதோடு ஐந்தாமவர் பாதுகாப்பு படையினருடனான மோதலின்போது கண்ணீர்ப் புகையால் மூச்சுத்திணறி பலியாகி இருப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் தாம் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை என்றும் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் 39 பொலிஸார் மோசமான காயங்களுக்கு உள்ளானதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் தலைமையிலான ஆளும் சபை ஒன்று அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே இந்த வன்முறை வெடித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த ஆளும் சபையின் தலைவராக ஜெனரல் அப்தல் பத்தா அல் புர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இராணுவ சதிப்புரட்சித் தலைவர் ஏற்கனவே அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையின் சிவில் பிரிவை கலைத்து, சிவில் தலைவர்களை கைது செய்ததோடு அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

Mon, 11/15/2021 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை