மட்டு - கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டு - கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்-Batticaloa-Colombo Express Train Service Restarted

திருத்தப்பணிகள் காரணமாக கடந்த சில தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு - கொழும்பு இடையிலான இரவு நேர கடுகதி பாடும்மீன் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டு புகையிரத நிலைய அதிபர் ஏ. பேரின்பராசா தெரிவித்தார்.

தினமும் இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் பாடும்மீன் கடுகதி புகையிரத சேவை, புனானைக்கும் வெலிகந்தைக்குமிடையில் புகையிரத பாதையில் பாலம் திருத்தப்பணிகள் காரணமாக, இரவு 10.20 மணிக்கு பொலன்னறுவையிலிருந்து சேவையிலீடுபட்டு வந்தது.

மட்டு - கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்-Batticaloa-Colombo Express Train Service Restarted

தற்போது திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான நேரடி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை 8.15 மணிக்கு பாடும்மீன் புகையிரதம் கொழும்பு நோக்கி புறப்பட்டது.

ரீ.எல். ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர்

Mon, 11/29/2021 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை