வைரஸ் திரிபை கண்டுபிடித்ததற்கு தண்டனை: தென்னாபிரிக்கா கவலை

புதிய கொரோனா வைரஸ் வகையைக் கண்டறிந்ததற்காகத் தான் தண்டிக்கப்படுவதாக தென்னாபிரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டதை அடுத்து, அதற்கும் அதை ஒட்டிய மற்ற சில நாடுகளுக்கும், பல உலக நாடுகள் பயணத் தடை விதித்தன.

மரபணுக் கூறுகளைத் திறம்பட ஆராய்ந்து, புதிய வகை வைரஸை விரைவில் கண்டறிந்ததற்குத் தான் இப்படித் தண்டிக்கப்படலாமா? என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வினவியுள்ளது.

திறன்மிக்க அறிவியல் ஞானம் பாரட்டப்பட வேண்டுமே தவிர, இப்படி தண்டிக்கப்படக்கூடாது என்று அது கூறியது.

புதிய வகை வைரஸ் உலகின் மற்ற பல நாடுகளிலும் தென்பட்டுள்ளதாக தென்னாபிரிக்கா கூறியது. இஸ்ரேலும், பெல்ஜியமும் தங்கள் நாடுகளில் வைரஸ் வகை கண்டறியப்பட்டதை உறுதி செய்துள்ளன.

உலக சுகாதார அமைப்பு, ‘கவலைக்குரிய’ வைரஸ் வகைகளின் பட்டியலில் ஒமிக்ரோனைச் சேர்த்துள்ளது. அது டெல்்டாவைக் காட்டிலும், அதிவேகத்தில் பரவக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வைரஸ் திரிபு கிட்டத்தட்ட தென்னாபிரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Mon, 11/29/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை