சீனாவில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு

சீனாவில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு-Vegetable price increases in China

சீனாவில் மரக்கறி விலை அதிகரித்திருக்கும் சூழலில் காலநிலை மாற்றம் மற்றும் சாதாரண குளர்காலத்தை விடவும் குறைவான வெப்பநிலை ஒன்றை கொண்டுவரக்கூடிய எதிர்வரும் லா நினோ நிகழ்வினால் மரக்கறி உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்காக சீன விவசாய மற்றும் கிராமிய விவகார அமைச்சு அவசர திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

வசந்தகால விழா மற்றும் குளிர்கால ஒலிம் பிக் போட்டியை எதிர்நோக்கி இருக்கும் சீனாவில் காய்கறி விலை அதிகரித்து வருவதற்கு எதிரான நடவடிக்கையாக மரக்கறிகளின் நிலையான விநியோகம் மற்றும் விலையை உறுதி செய்ய நிர்வாகம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மோசமான காலநிலை, அதிக உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள், மின் வெட்டு மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பினால் கடந்த செப்டெம்பர் தொடக்கம் மரக்கறி விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உற்பத்தியை கண்காணிக்கவும் நகரங்களில் தடையில்லாத விநியோகத்தை உறுதி செய்வதற்கும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு குறித்த அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

Fri, 11/05/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை