காதர் மஸ்தான் எம்.பியின் தந்தை காலமானார்

காதர் மஸ்தான் எம்.பியின் தந்தை காலமானார்-K Kader Masthan MP's Father Passed Away

- பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அனுதாபம் தெரிவிப்பு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்.பியின் தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் காதர் (77 வயது) திடீர் சுகவீனம் காரணமாக நேற்று காலமானார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ காதர் மஸ்தான் எம்.பியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

பிரபல சமூக சேவகரும் கொடைவள்ளலுமான இவர் தனதும் குடும்பத்தினதும் முழு விடயங்களிலும் அதீத அன்பும் அக்கறையும் கொண்டு தங்களை அரவணைத்து செயற்பட்ட அவரின் இழப்பின் துயரத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என காதர் மஸ்தான் எம்.பி தெரிவித்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா நேற்று மாலை தெஹிவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Fri, 11/05/2021 - 07:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை