கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய சிகிச்சை கண்டுபிடிப்பு

கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய சிகிச்சை கண்டுபிடிப்பு C-ervical Cancer Vaccine

ஹியூமன் பபிலோமா வைரஸ் (HPV) தடுப்பு மருந்து கருப்பை வாய் புற்றுநோயை (Cervical cancer) கிட்டத்தட்ட 90 வீதம் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த கண்டுபிடிப்பு வரலாற்று சிறப்புமிக்கது என, பிரிட்டன் புற்றுநோய் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து உயிரை காப்பது காண்பித்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து கருப்பை வாய் புற்றுநோய்களும்  வைரஸ்களால் உருவாவதால் இந்த தடுப்பு மருந்து நோயை ஒழிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும் இந்த தடுப்பு மருந்தை எடுத்து கொண்டபின்னும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஸ்மியர் சோதனையை (Smear test) சில முறை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 11/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை