சூடான் போராட்டத்தில் மேலும் மூவர் உயிரிழப்பு

சூடான் நாட்டில் கடந்த வாரத்தில் இராணுவ ஜெனரல் அப்தெல் படாஹ் புர்ஹான், சிவில் அரசை கலைத்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை சூடானின் தலைநகர் கார்டோம் உட்பட பல்வேறு நகரங்களில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிரதமர் அப்தெல்லா ஹம்தோக்கை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். ஒம்டுர்மன் நகரத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மூன்று போராட்டக்காரர்கள் இறந்துவிட்டதாக சூடானின் மத்திய மருத்துவர்கள் குழு என்ற சுயாதீன அமைப்பு கூறியுள்ளது.

சூடானின் உள்துறை அமைச்சகம் அதை மறுத்துள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மத்தியிலான மோதலில் 10க்கும் மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளனர்.

தற்போது சூடான் அதிகாரிகள் இணையம் உட்பட பல்வேறு தொலைத் தொடர்பு வசதிகளைத் துண்டித்துள்ளனர். அதோடு மக்கள் நடமாட்டத்துக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

Mon, 11/01/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை