நாட்டில் 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (11) வரை நீடிக்கின்றது. அதற்கமைய, பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த வீட்டில் வசித்தவர்களுக்கு முன்கூட்டியே வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்த போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் அங்கு இருந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை