நீதியமைச்சர் அலி சப்ரியின் முயற்சிக்கு JVP பாராட்டு

சபையில் அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு

காலத்துக்கு ஒத்துவராத சட்டங்களை புதுப்பிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி மேற்கொள்ளும்  முயற்சி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று சபையில் பாராட்டு தெரிவித்தார்.பிரதமர் கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.இது குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனரென அனுர குமார திசாநாயக்க மீண்டும் கேள்வி எழுப்பினார். சட்டம் தொடர்பான அறிவுள்ள குழுவொன்று புதிய அரசியலமைப்பு உருவாக்க நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி செயலணி எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது என்றே கேட்டேன். பல தடவை ஜனாதிபதியாக பணியாற்றிய மஹிந்த ராஜபக்ஷவும் பல ஜனாதிபதி செயலணிகளை நியமித்துள்ளார்.அவருக்கு அது தொடர்பில் அனுபவம் உள்ளது. பிரதேச மட்டத்திலான சட்டங்கள் கூட உள்ளன.அவற்றை இணைத்தே புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. ஒருநாடு ஒருசட்டம் தொடர்பில் சட்ட நகல் ஒன்றை தயாரித்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அவருக்கு கூட இந்த செயலணி தொடர்பில் தெளிவு கிடையாது. சட்டங்களை புதுப்பிப்பதற்காக நீதி அமைச்சர் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

ஷம்ஸ் பாஹிம்

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை