ஆப்கானிஸ்தானில் அதிகரித்துவரும் தாக்குதல் சம்பவங்கள்

ஆப்கானிஸ்தானில் அதிகரித்துவரும் தாக்குதல் சம்பவங்கள்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்ட்டிலுள்ள மதப் பாடசாலையொன்றில்  ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஏழாக  உயர்ந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளரென 'ஸ்புட்னிக்' குறிப்பிட்டுள்ளது. கைக்குண்டொன்று வெடித்ததன் விளைவாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, வடகிழக்கு நகரான குண்டூஸிலுள்ள ஷீஆ முஸ்லிம்களின் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதோடு 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர்.  

மற்றொரு வெடிப்பு சம்பவம் காபூலிலுள்ள ஈத் காஹ் பள்ளிவாசலுக்கு அருகில் ஏற்பட்டதில் 12 பேர் கொல்லப்பட்டதோடு 32 பேர் காயமடைந்துள்ளனர் எனவும்  இத்தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தலிபான் இடைக்கால அரசின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆப்கான் பிரிவு பொறுப்பேற்றிருப்பதாகப் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.என். ஐ. குறிப்பிட்டுள்ளது. ஆப்கானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்ததைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவருவது சர்வதேச மட்டத்தின் கவனத்தை ஈர்த்திருப்பது தெரிந்ததே.

Sun, 10/10/2021 - 14:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை