குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!

குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!-Nallur Temple 10th Custodian Kumaradas Maapana Mudaliyar's Final Rituals

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின்  இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று.

அவரது பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!-Nallur Temple 10th Custodian Kumaradas Maapana Mudaliyar's Final Rituals

மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09) காலை இறைவனடி சேர்ந்தார்.

இந்நிலையில் இறுதி கிரியைகள் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை  நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.

மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!-Nallur Temple 10th Custodian Kumaradas Maapana Mudaliyar's Final Rituals

இதில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பூதவுடல் காலை 11.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது

மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!-Nallur Temple 10th Custodian Kumaradas Maapana Mudaliyar's Final Rituals

1964 டிசம்பர் 15 முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக அவர் சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கத்து.

மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!-Nallur Temple 10th Custodian Kumaradas Maapana Mudaliyar's Final Rituals

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

Sun, 10/10/2021 - 14:04

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை